பொலிவியா நாட்டில் மலையில் பேருந்து உருண்டு விபத்திற்கு உள்ளானதில் 20 பேர் பலியாயினர், 30 பேர் காயமடைந்தனர். லத்தீன் அமெரிக்கா நாடான பொலிவியா நாட்டின் கிழக்கு மாகாணத்தில் யங்காஸ் பகுதியின் லபாசா லா அஸ்துனா இடையே மலைப்பாதையில்,
பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஆன்டஸ் பகுதியின் வளைவில் வந்து கொண்டிருந்த போது பேருந்து இன்ஜினில் ஏற்பட்ட கோளாறால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலையில் உருண்டு விபத்திற்குள்ளானது.
20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக