புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

டில்லியில் தங்கியிருந்த காதலன் திடீரென கழுத்தில் பாட்டிலால் குத்தி தற்கொலை செய்வதை இணைய தளத்தில், பிரிட்டனில் இருந்த காதலி நேரடியாகப்பார்த்து மயக்கம் அடைந்தார்.பிரிட்டன் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்தவர் ஆட்ரியன் ரோலண்ட், 53. வாகனங்கள் தயாரிப்பு குறித்தான
ஆலோசகராக உள்ளார். இவர், டில்லியில் கிரீன் பார்க் அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது காதலி ஜூலி ஜாலன்ஸ்கி. 

இவர் கடந்த மாதம் டில்லிக்கு வந்தார். பின்னர் காதலனும், காதலியும் ஆக்ரா சென்று தாஜ்மகாலை கண்டு ரசித்தனர். சில நாட்களுக்குப் பின், காதலி மட்டும் பிரிட்டன் திரும்பினார். காதலன் டில்லியில் தங்கியிருந்து பணியாற்றிவந்தார். இருவரும் அடிக்கடி இணைய தளம் மூலமாக, ஒருவரை ஒருவர் கேமராவில் நேரில் பார்த்து பேசிக்கொள்வது வழக்கம். 
காதலன் உளறல்:சில தினங்களுக்கு முன், இருவரும் இணைய தள வீடியோ மூலம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காதலன் ரோட்லண்ட்டின் பேச்சு, அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் பேசுவது போல் இருந்தது. திடீரென காதலன் தன்னைக் கொல்ல சிலர் முயற்சிக்கிறார்கள் என்று கூறி, அறையில் அங்கும் இங்கும் ஓடினார். ஆனால், அந்த அறையில் காதலனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை இணையதள வீடியோ மூலம் பார்த்துக் கொண்டிருந்த காதலிக்குத் தெரிந்தது. பிறகு ஏன் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என, புரியாமல் பதட்டம் அடைந்தார். உடன் அருகே வசிக்கும் தன் தோழியை உடனே புறப்பட்டு வரும்படி அழைத்தார். 
கழுத்தில் குத்தினார்:அவர் வந்ததும், அவரிடமும் இணைய தள வீடியோ காட்சியை காட்டினார். அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே, அடுத்து தெரிந்த காட்சி மிகவும் பயங்கரமாக இருந்தது. அறையில் இருந்த காதலன், சமையலறைக்குள் ஓடிச் சென்று, ஒரு பாட்டிலை எடுத்து உடைத்தார். உடைந்த பாட்டிலைக் கொண்டு தன் கழுத்துப் பகுதியில் ஓங்கி குத்தினார்.இதனால், அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியதைக் கண்டு காதலி அதிர்ச்சியில் உறைந்தார். காதலனை எப்படிக் காப்பாற்றுவது என்பது தெரியாமல் புலம்பினார். உடனே அவர் இது குறித்து அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து வந்த பெண் போலீசிடம், அவர் இணையதள வீடியோ காட்சியைக் காண்பித்தார். 
போலீசிடம் விவரம் இதையடுத்து, அந்த பெண் போலீஸ் டில்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவித்தார். அவர்கள் டில்லி போலீசில் தெரிவிக்க, டில்லி போலீசார் விரைந்து சென்று ரோட்லண்ட் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரத்தத்தில் உறைந்து ரோட்லண்ட் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உயிருக்கு உயிரான காதலன் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென தற்கொலை செய்து கொண்டதை, சில மணிநேரம் பார்த்துக் கொண்டிருந்த காதலி மயக்கம் அடைந்தார். அவருக்கு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டில்லியில் தற்கொலை செய்த ரோட்லண்டின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் இங்கிலாந்து தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என, தெரிகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top