தனது மகள்கள் நன்றாகப் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காக தனது கெளரவத்தையும் பாராமல், மதுரை பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த ஒரு தந்தையின் நிலையை அறிந்து மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் லேப்டாப் கம்ப்யூட்டர் கொடுத்து உதவியுள்ளார். அதை அந்த பெரியவரின்
மகளுக்குக் கொடுத்த மதுரை கலெக்டர் சகாயம் படிப்பு தொடர்பான அனைத்து உதவிகளுக்கும தன்னை அணுகலாம் என்று அவருக்கு அறிவுரை கூறினார்.
மகளுக்குக் கொடுத்த மதுரை கலெக்டர் சகாயம் படிப்பு தொடர்பான அனைத்து உதவிகளுக்கும தன்னை அணுகலாம் என்று அவருக்கு அறிவுரை கூறினார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 1986ம் ஆண்டு ரயில் விபத்தில் சிக்கி காலை இழந்தார். ஒற்றைக் காலுடன் கஷ்டப்பட்டு பிழைத்து வந்தார். இவருக்கு 1991ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. மனைவி மற்றும் வள்ளிமயில், சுந்தரவல்லி என்று இரு மகள்களுடன் வசித்து வந்தார்.
குடும்பம், மனைவி, மகள்கள் என்று ஆனதால் வருமானம் போதவில்லை. இதனால் மதுரை வந்த அவர் அங்கு ஹோட்டலில் வேலை பார்த்தார். அந்த வருமானம் போதுமானதாக இல்லை. குறிப்பாக தனது மகள்களைப் படிக்க வைக்க செலவு செய்ய முடியாமல் தவித்தார்.
இதனால் தனது கெளரவத்தை விட்டு மதுரையில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார். வீதி வீதியாக சென்று என் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று கூறி உதவி கேட்டார். இதைக் கேட்டு உருகிய பலரும் உதவி செய்துள்ளனர்.
இதை வைத்து தனது மூத்த மகள் வள்ளிமயிலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்தார். தற்போது அவர் 2-ம் ஆண்டு பி.இ. படிக்கிறார். அடுத்த மகள் பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளார்.
இவரின் நிலை அறிந்து, மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் தமிழ் அரிமா சங்கம் சார்பாக ரூ.8 ஆயிரம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது ரவிச்சந்திரன் தனது என்ஜினீயரிங் மகளுக்கு ஒரு லேப்-டாப் வழங்கினால் படிப்புக்கு உதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு முயற்சியால் தொழில் அதிபர் வாலாந்தூர் பாண்டியன் என்பவர் ரூ.35 ஆயிரம் மதிப்பில் ஒரு லேப்-டாப் வழங்கினார்.
அதை, மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று மாணவி வள்ளிமயிலுக்கு வழங்கினார். அப்போது கலெக்டர் சகாயம், படிப்பது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று வள்ளிமயிலுக்கு அறிவுரை வழங்கினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக