நெல்லை ஜங்ஷன் ரயில்வே காலனியை சேர்ந்த ரயில்வே ஊழியர் பரமசிவன் மகன் சரவணக்குமார் (23). கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.கடந்த 9ம் தேதி நெல்லையில் இவர் மாயமானதாக கூறி இவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
காணாமல் போன சரவணக்குமாரின் மனைவி சத்தியாவும், கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த டாக்சி டிரைவர் கனகராஜ் என்பவரும் நண்பர்களுடன் சேர்ந்து இக்கொலையை செய்திருப்பது தெரிய வந்தது.
நெல்லை சந்திப்பு போலீசார் உடனடியாக கொடைக்கானல் சென்று கனகராஜ், அவரது நண்பர்கள் கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த மதன்(33), அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஸ்(23), ரஞ்சித்குமார்(19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நெல்லையில் சரவணக்குமாரின் மனைவி சத்தியாவையும் கைது செய்தனர்.
சரவணக்குமாரின் மனைவி சத்தியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘’எனது திருமணத் திற்கு முன்பே நானும், கனகராஜூம் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம்.
எனக்கும், சரவணக்குமாருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் அதற்கு பின்பும் எனக்கும், கனகராஜூக்கும் உள்ள பழக்கம் நீடித்து வந்தது. என்னால் என் காதலரை மறக்க முடியவில்லை. என் கணவருடன் வாழ முடியவில்லை.
கடந்த ஏப்.2ம் தேதி நான் கனகராஜை அழைத்து கொண்டு வீட்டை வீட்டு வெளியே சென்றுவிட்ட நிலையில், எனது தந்தை தங்கவேல் நான் மாயமா னதாகவும், கனகராஜ் என்னை கடத்தி சென்றுவிட்டார் என்றும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பின்னர் நானே காவல் நிலையம் சென்று, யாரும் என்னை கடத்தி செல்லவில்லை என்றும், பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறினேன் என்றும் தெரிவித்தேன்.
இதனால் போலீசார் மேல்நடவடிக்கையை கைவிட்டனர்.
இந்நிலையில் எனது தந்தையார், என்னையும், எனது கணவர் சரவணக்குமாரையும் கடந்த 4ம் தேதியன்று நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள எனது மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். நான் இங்கிருந்து கொண்டே கனகராஜூடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தேன்.
‘எனது கணவரை தீர்த்து கட்டிவிடு. அப்போதுதான் நாம் இருவரும் சேர்ந்து ஜாலியாக வாழ முடியும்‘ என நான் கனகராஜூடம் தெரிவித்தேன். இதை கேட்ட கனகராஜ் தன் நண்பர்களோடு சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி கடந்த 9ம் தேதி நெல்லை வந்த கனகராஜ், என்னிடம் தொடர்பு கொண்டு, சரவணக்குமாரை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொண்டார். நானும் எனது கணவரிடம் நமது திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சில நண்பர்கள் இப்போது தங்களை காண வந்திருப்பதாக கூறி, ஜவுளி கடைக்கு அனுப்பி வைத்தேன்.
அங்கு நின்றிருந்த கனகராஜூம், அவரது நண்பர்களும் எனது கணவரை ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை காரிலேயே மது அருந்த செய்து, கயிற்றால் கழுத்தை நெரித்து, கொடைக் கானலுக்கு கொண்டு மயிலாடும் பாறை என்ற இடத்தில் இருந்து உடலை பள்ளத்தில் தூக்கி எறிந்துள்ளனர்’’என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக