காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் பல பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார். இதை தன் செல்போன் மூலம் படம் பிடித்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்தார்.
இந்த ஆபாச படம் பலரது செல்போனுக்கு பரவியது. இதயடுத்து சிவகாஞ்சி போலீசார் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதனை செல்போனில் படம் பிடித்து அதை காட்டி மிரட்டி அடிக்கடி கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என காஞ்சீபுரம் கோர்ட்டில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
அர்ச்சகர் தேவநாதன் கடந்த 2010-ம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை எந்த கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என கூறப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் கோர்ட்டில் இருந்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இந்த கோர்ட்டில் கடந்த 10 மாதங்களாக நீதிபதி இல்லாததால் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தேங்கி கிடந்தன.
இந்த நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 28-ந் தேதி பொறுப்பேற்றார். இதனால் தேங்கி கிடந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.
செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக