புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புற்றுநோய் என்பது எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வரும் என்ற நிலை உருவாகிவிட்டது. சின்னக்குழந்தைகளை கண் புற்றுநோய் தாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கண்ணில் புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. கண்களில் புற்று நோய்
ஏற்பட முக்கிய காரணம் பரம்பரை. மற்றொன்று மரபணு மாற்றம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கண்களில் ஏற்படும் புற்றுநோயை ரெடினோ பிளாஸ்டோமா என்று மருத்துவ உலகம் பெயரிட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 300 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒளிரும் கண்கள்

கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கருவிழியில் வெள்ளை படலம் படர்ந்து, இரவில் மிருகங்களின் கண்கள் ஒளிர்வது போல் இருக்கும். மாறுகண் பாதிப்பு இருப்பது போல் தோற்றமளிக்கும். சில குழந்தைகளுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும்.

கண்களில் வலி ஏற்படும், கண்ணின் பாவை பல நிறங்களாக மாறும்.

கண்களில் வரும் இந்த புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில் கண்பார்வை முற்றிலும் இழக்க நேரிடும். புற்றுநோயானது முகம் முழுவதும் பரவி அது மற்ற உறுப்புகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே இந்த அறிகுறிகள் தென்பட்ட உடனே கண்மருத்துவர்களை அணுகவேண்டும் என்பது அவர்களின் அறிவுரையாகும். மேலும் மூன்று வழிமுறைகளில் இதனை குணப்படுத்தலாம் எனவும் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண் பார்வை இழப்பு

அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. இதனால் சில சமயம் கண்பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.

இன்ட்ரா எட்ரியல் கீமோதெரபி

இன்ட்ரா கீமோதெரபியில், லேசர் கதிர்களை கண்களுக்கு வெளியே செலுத்தப்படுகிறது. இது புற்றுநோய் கட்டியில் ஊடுருவி சென்று அதனை அழிக்கும். கண்பார்வைக்கு பாதிப்பு இல்லாமல் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்.

கண்களுக்கு மேல் சின்ன வட்டமான பிளேட் வைத்து அதன் வழியாக கண்களுக்கு லேசர் கதிர்களை செலுத்தும் முறைக்கு பிராகி தெரபி. இது புற்றுநோய் கட்டியை மட்டும் தாக்கும். முகத்தில் மற்ற பாகங்களை பாதிக்காது. அதே சமயம் கண் பார்வையும் காப்பாற்ற முடியும்.

பெரியவர்களையும் பாதிக்கும்

இந்த நோய் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் பாதிக்கும். பெரியவர் களை பொறுத்தவரை, நாற்பது வயதுக்கு மேல் இந்த பாதிப்பு ஏற்படும். மெலனாமா புற்றுநோய் என்று அழைக்கப்படும் இந்த நோயின் பாதிப்பு கருவிழி முழுதும் வெள்ளை படலம் படர்ந்து இருக்கும்.

பார்வை குறைவது மட்டும் இல்லாமல் பக்கவாட்டில் உள்ள பொருட்களைப் பார்க்கும் திறனும் குறையும். இவர்களுக்கு பிராகி தெரபி சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top