சந்தனக் குளிராய்,தூரமழைச்சாரலாய்,
ஈரக்காற்று வீசும் இதமான பூமி சாந்தை.
மனிதம் நடமாடி மௌனம் குடியிருக்கும்
அழகான பூமி சாந்தை-சாந்தையின்
மகுடம் எங்கள்மனிதர்களின்வெளிச்சம்.
எங்கள் மனிதர்களின் அறிவுக்கு ஊற்று.
நாளைய தலைமுறைக்கு அன்பெனும் நாற்று.
சித்திவினாயகர் சன சமுக நிலையம்.
29 ஆண்டு மலர்களை உதிர்த்த ஜீவாலயம்.
இனி பல பசுமைகளை படைக்கப்போகும் அறிவாலயம்.
உலக மனிதர்களெல்லாம் அறியப்போகும் அழகாலயம்.
இது ஆறுமுக பஞ்சாட்சரம் அன்பில் முளைத்த ஆலமரம்.
இங்கு இனி குயில்கள் கூடுகட்டும்.
குண்டுகள் சத்தமிடாது,தென்றலில் சந்தனம் வீசும்,
அமிலம் வீசாது,விடியலில் பூபாளம்தான்.
அவலராகம் கிடையாது,இது உலகம் மெச்சும்
உச்சபூமி வாழும்,வாழவைக்கும்
இது மனிதர்களின் வார்ப்பு கடவுளின் தீர்ப்பு!
நன்றி
கவிதை
சதா-சாந்தை
|
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாந்தையூரை பற்றி கவிதை படைத்த சதா அவர்களை சாந்தை இணையத்தின் மூலம் பாராட்டுகிறோம்
பதிலளிநீக்கு