புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவின் ஷாங்காய் சேர்ந்தவர் ஹி. திருமணமானவர். இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைனில் திருமணமான ஒரு பெண் அறிமுகமானார். அதன்பின் இருவரும் அடிக்கடி ஆன்லைனில் பேசி கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
அதன்பின் நேரில் சந்தித்து பேசினர். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்காக இருவரும் தங்கள் மனைவி, கணவனை விவாகரத்து செய்தனர். அதன்பின் ஹியும் அந்த பெண்ணும் ஒரு அபார்ட்மென்டில் குடியேறினர். எனினும், திருமணம் செய்து கொள்வதற்கு முன் தனக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கி தரவேண்டும் என்று அந்த பெண் நிபந்தனை விதித்தார். ஆனால், ஹியிடம் வீடு வாங்கும் அளவுக்கு பணம் இல்லை. பெற்றோரிடம் பணம் கேட்டு பார்த்தார். மனைவியை விவாகரத்து செய்து விட்டு மகன் 2வது திருமணம் செய்து கொள்வதை விரும்பாத அவரது பெற்றோர் பணம் தர மறுத்துவிட்டனர். இதற்கிடையில், ஹியிடம் பணம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட அந்த பெண் விலகிவிட்டார். வேறொரு பணக்கார வாலிபரை காதலிக்க தொடங்கினார். இதில் ஆத்திரம் அடைந்த ஹி, அந்த பெண்ணுக்கு பார்சலில் நாட்டு வெடிகுண்டுகளை அனுப்பினார். பார்சலை வாங்கிய பெண்ணின் பெற்றோர், அதில் வெடிகுண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தீவிர விசாரணைக்கு பின் ஹியை போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top