இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை, 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.2009ம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் சிறிலங்காவுக்குச் சென்றுள்ளனர்.
அண்மைக்காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை சிறிலங்காவும் சீனாவும் அதிகரித்து வருகின்றன.இந்தநிலையில் சிறிலங்காவை நோக்கி சீனர்கள் அதிகளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக