புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்தவர், பக்தவச்சலம் (28). அவருடைய மனைவி, விமலா (23). இவர்களுக்கு 31/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தனியாக தொழில் தொடங்க ரூ.1 லட்சம் பணம் வாங்கி தருமாறு பக்தவச்சலம், மனைவி விமலாவிடம் தொந்தரவு செய்து வந்தார்.

அதற்கு விமலா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்தவச்சலத்தின் தந்தை சண்முகம் மற்றும் குடும்பத்தினர் விமலாவை கொடுமைப்படுத்தி வந்தனர். இதற்கிடையில் கடந்த மாதம் 5-ந் தேதி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, தனது செல்போனில் ஏற்கனவே படம் பிடித்து வைத்து இருந்த இருந்த மனைவியின் நிர்வாண படத்தை விமலாவிடம் பக்தவச்சலம் காட்டி இருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ந்து போன விமலா, படத்தை அழிக்குமாறு கணவனின் காலில் விழுந்து கெஞ்சி, கதறினார்.

அதைப் பொருட்படுத்தாத பக்தவச்சலம், ரூ.1 லட்சம் பணம் வாங்கி வந்தால்தான் படங்களை அழிப்பேன். இல்லையென்றால் உன் படத்தை மட்டுமின்றி, உனது உறவுப் பெண்களையும் நிர்வாண படம் எடுத்து இண்டர்நெட்டுக்கு அனுப்பி பணம் சம்பாதித்துக் கொள்வேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் பயந்து போன விமலா, கைக்குழந்தையுடன் கெங்கவள்ளியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று, பின்னர் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பக்தவச்சலம், அவருடைய தந்தை சண்முகம் (58), தாய் தனலட்சுமி (51), சகோதரர் கமலக்கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விமலாவின் கணவர் பக்தவச்சலத்தை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பக்தவச்சலத்தின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள புலனாய்வு பிரிவுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top