தங்கொட்டுவ – ஏட்டியாவல பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஒரு குழு மதுபோதையில் கலகத்தில் ஈடுபடுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அது குறித்து ஆராய பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளது.
இதன்போது, கலகம் ஏற்படுத்திய குழுவில் இருந்த ஒருவர் கையில் வைத்திருந்த போத்தலால் பொலிஸ் கான்ஸ்டபிள் தலையில் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிளை சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக