புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பேய் ஓட்டுவதாக கூறி மனநலம் பாதித்த பெண்ணை தொடர்ச்சியாக பலமுறை செய்து கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர் ராஜஸ்தான் மாநிலம் ரெயின்வால் கிராமத்தை சேர்ந்தவர் ரிஷா (20).இவருக்கு திடீரென மனநலம் பாதித்தது. அவருக்கு பேய் பிடித்திருப்பதாக
பெற்றோர் கருதினர். மகேஷ் ஜோஷி என்ற மந்திரவாதி பற்றி சிலர் கூற, ரிஷாவை அவரிடம் அழைத்து சென்றனர். தானே வீட்டுக்கு வந்து பேய் ஓட்டுவதாக மகேஷ் கூறியுள்ளார்.

இதையடுத்து, அடிக்கடி ரிஷாவின் வீட்டுக்குசென்றர் மகேஷ். ரிஷாவை வைத்து தனியாக பூஜை நடத்த வேண்டும் என்று கூறி பெற்றோரை வெளியே அனுப்பி விட்டு அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதுபோல் பலமுறை ரிஷாவை அவர் சீரழித்துள்ளார்.

மாதக்கணக்கில் ஆகியும் ரிஷாவுக்கு உடல்நிலை குணமாகாததால் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிஷா திடீரென மயங்கி விழுந்தார்.மருத்துவமனையில் பரிசோதித்தில் ரிஷா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மகேஷ் மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில், மயக்க மருந்து கொடுத்து ரிஷாவை மகேஷ் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top