புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மந்திரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணொருவரும் அகப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,சவூதி
அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினர் பொருட் கொள்வனவிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் அவர்களின் 13 வயது சிறுமியை வசியம் செய்ய முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகள் திடீரென வழமைக்கு மாறான செயல்கள் ஈடுபட்டதாக சவுதி அரேபியர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜித்தா நகரிலுள்ள வர்த்த நிலையமொன்றில் குறித்த இலங்கை பெண் அருகில் வந்த பின்னரே தனது குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மந்திரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சவூதி அரேபியாவில், குறித்த பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பலாம் என சவூதி அரேபிய பொலிஸாரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கை பெண் கைது செய்யப்பட்டுள்ளதை அந்த நாட்டு பொலிஸார் உறுதிசெய்துள்ளதாக ரொய்ட்டர் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாந்திரீக குற்றங்களுக்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை கடந்த டிசம்பர் மாதம் கண்டனம் வெளியிட்டிருந்தது.

இவ்வாறான குற்றச்சாட்டில் சூடானைச் சேர்ந்த பிரஜையொருவருக்கு சவூதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top