புதுச்சேரியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ஒருவரை வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுவையைச் சேர்ந்த சந்துரு என்பவர் கலைச்செல்வி என்ற பெண்ணை நீண்ட திகதிகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தன்னை காதலிக்குமாறு சந்துரு பலமுறை கட்டாயப்படுத்தியும், கலைச்செல்வி மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கலைச்செல்வியிடம் சந்துரு தன்னை காதலிக்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட போது ஆத்திரமடைந்த சந்துரு, தனது சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கலைச்செல்வியின் கழுத்தை அறுத்தார்.
இதனால் கலைச்செல்வி மயக்கமடைந்தார். அருகே இருந்தவர்கள் சுற்றி வளைத்ததால், சந்துரு அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார். இச்சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கலைச்செல்வியும், சந்துருவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக