பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட முற்பட்டதாக கூறப்படும் பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவியொருவரை முச்சக்கர வாகன சாரதிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கம்பளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பெண்ணிடம் கத்தியை காட்டி அச்சுறுதித்திய இம்மாணவி, தங்கசசங்கிலியை பறித்துக்கொண்டு ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கியிலிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக இவர் 9 லட்சம் ரூபாவை சேகரத்துள்ளதாகவும் 50,000 ரூபா பாக்கியிருப்பதாக வங்கியிலிருந்து இறுதி அறிவித்தல் வந்ததையடுத்து இம்மாணவி இந்நடத்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளத. அவர் உடல் ஊனமான தந்தை, வளர்ப்புத் தாயார், சிறிய சகோதரர்கள், சகோதரிகளுடன் வசித்து வருகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக