கனடாவின் பெற்றோரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் பிள்ளைகளின் முகநூலைப்(facebook) பார்த்து அவர்களின் நட்பு வட்டத்தை அறிந்து கொள்கின்றனர்.பதினோரு நாடுகளில் AVG என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் உலகளவில் 44 சதவிகிதம் பெற்றோர் சராசரியாக தமது பிள்ளைகளின் முகநூலைப் பார்க்கின்றனர். அமெரிக்கா. ஸ்பெயின் நாட்டுப் பெற்றோர்கள் 61 சதவிகிதம் இந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
பெற்றோரில் தாய்மாரே குழந்தைகளைக் கண்காணிப்பதில் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். 49 சதவிகிதம் தாய்மார் முகநூல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தந்தைமார் 39 சதவிகிதம் பேர் இந்த வேலையைச் செய்கின்றனர்.
பல பெற்றோர் முகநூலில் பதின்வயதினருடன் நண்பர்களாகி உள்ளனர். அமெரிக்காவில் 72 சதவிகிதம், கனடாவில் 66 சதவிகிதம், பிரான்சில் 32 சதவிகிதம் மற்றும் ஜப்பானில் 10 சதவிகிதம் பேர் பதின்வயதினருடன் நட்பு பாராட்டுகின்றனர்.
கனடா பெற்றோரில் 38 சதவிகிதம் பேர் தமது பிள்ளைகளின் சமூகவலைத்தளச் செயற்பாடுகள் அவர்களின் படிப்பு, வேலைவாய்ப்பு, நட்பு வட்டாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சுகின்றனர். இந்த அச்சம் அமெரிக்கப் பெற்றோரிடம் 40 சதவிகிதம் காணப்படுகிறது. உலக அளவில் 42 சதவிகிதம் பேர் இந்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
கனடா பெற்றோரில் 43 சதவிகிதம் பேர் தங்களின் பதின்வயதுப் பிள்ளைகள் ஆபாசப் படங்களையும், எழுத்துகளையும் பார்ப்பதாகவும் படிப்பதாகவும் நம்புகின்றனர். 6 சதவிகிதம் பேர் தமது பிள்ளைகள் வலைத்தளங்களில் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவதாகவும் 25 பேர் தம் பிள்ளைகள் திருட்டுத்தனமாக இசைப்பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதாகவும் கருதுகின்றனர். உலக சராசரி அளவை விட இந்த சதவிகித அளவு சற்றுக் குறைந்ததாகும்.
43 சதவிகிதம் பெற்றோர் பள்ளிகளில் நல்லமுறையில் பதின் வயதினருக்கு வலைத்தளப் பயன்பாடு கற்றுக்கொடுப்பதாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கை பிரிட்டனில் 57 சதவிகிதமும், செக் குடியரசு நாட்டில் 31 சதவிகிதமாகவும் உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக