கோழி ஒன்று குஞ்சை ஈன்றெடுத்த சம்பவம் அதிசயம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது கோழி முட்டை போடுவதும், அதை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதும்தான் வழமை.
ஆனால் இலங்கையின் வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர்
வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது.
வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது.
இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது.இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக