நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.
இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமாண தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயே இவ் முப்பரிமாணத் தன்மையை பார்வையிட முடியும்.
முப்பரிமாண கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக youtube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக