புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தமிழ்நாட்டில் தாயின் கண்முன்பே மகளை குத்தி கொலை செய்த கள்ளக்காதலனை பொலிசார் தேடி வருகின்றனர். சேலத்தை சேர்ந்தவர் சித்தேஸ்வரி (35). இவர் தனது கணவரை பிரிந்து சூரம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(40) என்கிற கறிக்கடை உரிமையாளர் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் செந்தில்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனால் செந்தில்குமாருக்கும், சித்தேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை சித்தேஸ்வரி தனது தாயாருடன் செந்தில்குமார் வீட்டில் இருந்த தனது பொருட்களை எடுத்து செல்வதற்காக வந்தார். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் கத்தியால் சித்தேஸ்வரியை குத்தினார். தடுக்க முயன்ற அவரது தாயாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டார். படுகாயம் அடைந்த சித்தேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சூரம்பட்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top