இரத்மலானையில் தானசாலைக்கு அருகாமையில் நேற்று காலை இடம்பெற்ற சண்டையின்போது, போத்தலொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தறையைச் சேர்ந்தவரும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவருமான...,
தர்ஷன கீர்த்திகுமார வயது 40 என்பவரே இச்சம்பவத்தில் பலியானார். போத்தலினால் தாக்கப்பட்ட இந்நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் மோட்டார் சைக்கிளிலிருந்து ஜக்கெட் திருட்டுப்போனமை தொடர்பில், வாக்குவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இத்தாக்குதல் இடம்பெற்றது. ஜக்கெட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரும் இத்தாக்குதலுக்கு பொறுப்பானவருமான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் கல்கிஸைப் பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக