புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆபாச வீடியோ இறுவட்டுக்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.இங்கிரிய வர்த்தக சந்தை கட்டிடத் தொகுதியில் சீடி விற்பனை நிலையமொன்றில்
மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிருவரையும் ஹொரணை நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஆபாச வீடியோ காட்சிகள் அடங்கிய சீடிகள் பலவும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சீடி விற்பனை நிலையம் தொடர்பாக இங்கிரிய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர்களை கைது செய்ததாக கூறும் இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top