அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதான இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 20 கிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
அநராதபுரம் பிராந்திய விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதேவேளை உடவல - சங்கபால பிரதேசத்தில் 105 சட்டவிரோத சிகரெட்களை வைத்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த பிரதேசத்தில் உணவகமொன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக