புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஈரோடு நகரில் உள்ள முன்சிபால் காலனியில் கறிக்கடை வைத்திருப்பவர் துரைசாமி. இவரது மகன் லோகநாதன் (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துரைசாமியின் வீட்டிலிருந்த 10 பவுன் நகை
திருட்டு போனது. இது குறித்து துரைசாமி வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்துள்ளார்.

துரைசாமி வீட்டில் நகை திருட்டு போனது குறித்து விசாரணை செய்து வந்த போலீசார் சில நாட்களுக்கு பிறகு நகை திருடிய குற்றத்துக்காக துரைசாமியின் மகன் லோகநாதனை கைது செயத்ள்ளனர்.இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து பொலிசார் தெரிவித்தாவது. துரைசாமியின் மகன் லோகநாதன் சரண்யா (வயது 19) என்ற ஒரு பெண்ணை காதலித்து வருகிறார்.

லோகநாதனின் காதலுக்கு இவரது வீட்டிலும் எதிர்ப்பு உள்ளது. அதே போல சரண்யா வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், இருவரும் வீட்டை விட்டு ஒட்டிப்போய் திருமானம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.திருமணத்திற்கு பிறகு கேரளாவுக்கு சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கிக்கொண்டு, அந்த பகுதியல் கோழிக் கறிகடை வைக்க முடிவு செய்துள்ளார் லோகநாதன்.

அதற்காக தன்னுடைய அப்பாவுக்கு தெரியாமல் வீட்டிலிருந்த பத்து பவுன் நகையை எடுத்து தன்னுடைய நண்பர் ஹரிகரன் என்பவரிடம் கொடுத்தது வைத்திருந்தார். போலீசார் ஹரிகரனிடம் இருந்த நகையை கைப்பற்றி உள்ளனர். கைது செய்யப்பட்ட லோகநாதன் இப்போது ஈரோடு கிளைசிறையில் இருக்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top