ஆணமடுவ பகுதியில் கூரான ஆயுதத்தால் தனது மனைவியைக் குத்திக் கொலை செய்து, ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.48 வயதான தனது மனைவியை, சந்தேகநபர் கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன
கூறினார்.
அதனைத் தொடர்ந்து சந்தேகநபரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
58 வயதான ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக