ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர், அதே மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணந்தார்.இவர்களுக்கு பெற்றோர்கள் திருமணம் நடத்தி வைத்தனர். இந்நிலையில் அந்த பெண் விவாகரத்து கோரி ஒரங்காபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், எனது கணவர் ஃபேஸ்புக்கில் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளார். அதை திருமணமானவர் என்று மாற்ற மறுக்கிறார். அதனால் அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இது குறித்து அந்த கணவனிடம் கேட்டதற்கு, திருமணம், வியாபாரம் என்று இருந்ததால் ஃபேஸ்புக்கில் திருமணமானவன் என்று மாற்ற மறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த தம்பதியை 6 மாத காலம் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஆண்டு விவகாரத்து ஆனவர்களில் மூன்றில் ஒரு சதவீதம் பேர் ஃபேஸ்புக் பிரச்சினையால் தான் பிரிந்தனர் என்று ஒரு சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக