புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


எங்கள் வெளிநாட்டு வாழ்க்கை வேதனை அல்ல சாதனை வெளிநாட்டில் உள்ளோர் தகுதியானவர் அல்ல பிறருக்கு வாழ்க்கை கற்றுக் கொடுப்பவர்கள் நாம் யார் என்பதையும், எமது இனம் எத்தகையது? என்பதையும் அடியோடு மறந்துவிட்டுத்தான்
இவர்கள் புலம்புகிறார்கள்! இலங்கையில் இருக்கும் போது, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! ஆனால் வெளிநாட்டில் அப்படி இருக்க முடியாது! இங்கு சில சட்ட திட்டங்கள், வரை முறைகள் இருக்கு! - சட்டங்களை மதித்து நடப்பது ஒருவனுக்கு கசக்கிறது என்றால், அவனை நாம் மனிதனாகவே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை!

இங்குள்ளவர்களிடம் “ எப்படியிருக்கீங்க?” என்று கேட்டால், பலர் பலவகையிலும் புலம்புவதைப் பார்த்திருக்கிறேன்! ” ஐயோ, கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி இருக்கு! எவ்வளவு உழைச்சாலும் மிஞ்சுதே இல்லை! அரசாங்கத்துக்கு வரிகட்ட வேண்டி இருக்கு! வேலை கிடைக்கவில்லை! சம்பளம் போதாது” இன்னும் சிலருக்கு வேலை செய்வது கஷ்டமாம்! குளிருக்கு வெளியே போய் வருவது கஷ்டமாம்! குனிஞ்சு நிமிர்வதே கஷ்டமாம்! இப்படி ஏகப்பட்ட புலம்பல்கள்! - இப்படிப் புலம்பி ஒப்பாரி வைப்பவர்கள் என்ன வெளிநாட்டவரும் மனிதன் தானே இங்கு பலருடைய பிரச்சனை,இருக்கும் வெளிநாட்டு மொழியை கொஞ்சமாவது கற்க வேண்டியதுதானே சும்மா வீண் வெட்டி பேச்சு பிறகு ஒரு அரசாங்க அலுவலுக்காகவோ, அல்லது ஒரு மருத்துவ அலுவலுக்கோ, சுயமாக போய் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவு! தொட்டதுக்கெல்லாம் அடுத்தவனை மொழிபெயர்ப்புக்கு அழைத்துக்கொண்டிருப்பார்கள்! - புலம்பல்கள் இங்குதான் ஆரம்பிக்கின்றன!

நமது உணவுப் பழக்கமே மிகப்பெரிய ஒழுக்கக் கேடுதான்! தமிழனின் ஆயுள் குறைந்து போவதற்கு முக்கிய காரணமே உணவுப் பழக்கவழக்கம் தான்! சில நல்ல விஷயங்கள் வெளிநாட்டவரிடம் இருந்து கற்று கொள்ளவேணும் அதில் ஒன்று சாப்பாட்டு முறைகள் உடல் பயிச்சிகள் நாங்கள் எவ்வண்ணம் வேலையும் வீடும் நாடகங்களும் அளவுக்கு மிச்சிய சாப்பாடுகள் முக்கும் வயுறும் முட்டும் பிறகு பார்த்தால் செல்லாச்சி பக்கத்தில் எதோ புதினமாம் கேள்விபட்டியோ !உணவுப் பழக்கத்தினால், குண்டாகவும், தொப்பையாகவும் இருந்தால், கண்டிப்பாக எம்மை நோய்கள் தாக்கத்தானே செய்யும்! அப்புறம் வெளிநாடு கசக்காமல் என்ன செய்யும்? எனக்குத் தெரிஞ்சு தமிழன் வீதிகளில் ரன்னிங் செய்யக் கூடாது என்றோ, அல்லது நன்கு உடல்பயிற்சி செய்யக் கூடாது என்றோ எங்குமே எழுதப்படவில்லை! ஆனால் எந்தத் தமிழனும் வீதியில் ஓடி நான் பார்த்ததில்லை!



நான் வீதியில் ஓடுவதை, சில தமிழர்கள் வேடிக்கை பார்த்தார்கள்! நான் அவர்களைக் கணக்கெடுப்பதே இல்லை!உங்களுக்கு நோய் வராமல் என்ன வரும்? சரி சரி நானும் இனி வேலைக்கு  ஓடப்போகின்றேன் வேலை முடிந்த உடன் மீண்டும் வருகின்றேன்:

அன்புடன் உங்கள் நண்பன்
தமிழ் கிறுக்கன்


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top