மேலைத்தேய கலாச்சரங்களுக்கு ஆளாகிய குற்றத்துக்காக, 17 வயது ஷகீலா என்னும் பெண்ணை அவரது தாய் தந்தையர் கொலைசெய்துள்ளனர். மேற்படி ஷகீலா என்னும் இப் பெண்ணை இவர்கள் ஒரு மாப்பிள்ளைக்கு கட்டாயக் கல்யாணம் செய்துவைக்க
முயன்றுள்ளனர். இதனை அவர் மறுக்கவே, பெற்றோர் ஷகீலாவின் கழுத்தில் பொலித்தீன் பையால் மூடி அவரைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். இக் கொலையை அவர் தங்கை நேரில் பார்த்துள்ளார். இருப்பினும் இச்சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று, பெற்றோர் கண்டிப்பாகச் சொல்லியுள்ளனர். இருப்பினும் அவர், பொறுக்கமுடியாமல் ஒரு நாள் பொலிசாரிடம் நடந்ததை தெரிவித்துவிட்டார்.
ஷகீலாவின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 7 வருடங்கள் கழித்தே ஷகீலாவின் தங்கை தனது பெற்றோர் இழைத்த கொடுமையை நீதிமன்றில் சொல்ல சம்மதித்துள்ளார். இருப்பினும் பெற்றோர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் இறுதியில் ஷகீலாவின் தங்கை, தான் நேரில் கண்டதை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெற்றொருக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக