அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் கூட்டுத்திட்டத்தில் விண்வெளியில் பூமிக்கு மேல் 390 கிலோ மீட்டர் உயரத்தில் வான்வெளி ஆய்வு நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு மையத்திற்கு ராக்கெட் மூலம் பொருட்களை எடுத்து செல்ல 'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு நாசா அனுமதி வழங்கியது. இதன்படி அந்த தனியார் நிறுவனம் நேற்று அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரால் தளத்தில் இருந்து ஆள் இல்லா சரக்கு ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது.
பின்னர் அது திட்டமிட்டபடி வாண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது. வருகிற வெள்ளிக்கிழமை அது வான்வெளி ஆய்வு மையத்துடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
0 கருத்து:
கருத்துரையிடுக