பிளஸ்டூவில் தேர்ச்சி அடைந்தாலும் மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் கடும் வருத்தமடைந்த மாணவி ஒருவர் தீக்குளித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பரமக்குடியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரும் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.
இன்று காலை ரிசல்ட்டைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பரீட்சையில் அவர் தேர்வடைந்திருந்தாலும், 711 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் கடும் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்.
இதையடுத்து வீட்டுக்கு விரைந்து வந்த அவர் தீக்குளித்து விட்டார். உடல் கருகிய நிலையில் அவரை உடனடியாக மதுரைக்குக் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக