தான் பிரசவித்த குழந்தையை விற்க முயன்றதாகத் தெரிவிக்கப்படும் தாயொருவரும் இக்குழந்தையை வாங்க முயன்றதாகத் தெரிவிக்கப்படும் பெண்ணொருவரும் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவில் பிறந்த இக்குழந்தையையே இத்தாய் விற்க முயன்றதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
விற்பதற்காக இன்னொரு பெண்ணிடம் இக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு கடிதம் மூலம் தான் குழந்தையை விற்பனை செய்வதை இத்தாய் உறுதிப்படுத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவர்கள் இருவரும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக