Fieux (Lot-et-Garonne) கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண்மணி ஒருவர் அவசரமாகக் காவற்துறையினரை அழைத்துள்ளார். தான் தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தள்ளார். அவரது
கணவன் தற்கொலை செய்வதற்காக நஞ்சை அருந்தியதாகவும்...,
அதை அருந்திய பின் அவர் பட்ட அவஸ்தையைப் பார்க்கச் சகிக்காது அவரை அவரது கத்தியால் கத்திக் கொன்றதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மனைவியுடன் நடந்த ஒரு வாய்த் தகராற்றின் பின்னர் 65 வயதுடைய இளைப்பாறிய விவசாயியான கணவன் எலிகளைக் கொல்வதற்காக வைத்திருந்த நஞ்சை எடுத்து அருந்தியுள்ளார்.
ஆனாலும் நஞ்சு கொடுத்த வேதனையில் துவண்டு போனவர் தன் 65 வயது மனைவியிடம் தன்னால் வலி தாள முடியவில்லை என்றும் தன்னனைக் கத்தியால் குத்திக் கொன்று விடும்படியும் கேட்டுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மனைவியை விசாரணைக்காகக் காவலில் வைத்துள்ளனர். இதனைத் தான் கொலையும் செய்வாள் பத்தினி என்பார்களோ!
0 கருத்து:
கருத்துரையிடுக