புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுப்பதற்காக தெய்வப் பரிகாரம் தேடி தேவாலயம் சென்ற சகோதரிகள் இருவரை ஆலயப் பூசகர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன்
தொடர்புடைய சந்தேக நபரான பூசகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தெல்தெனிய பதில் நீதிவான் பூசகரை ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கண்டி பொக்காவல கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் மீதே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் இழைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பன்வில பிரதேசத்தில் தேவாலயத்திற்குச் சென்று அங்குள்ள பூசகர் ஒருவரைச் சந்தித்து தங்கள் பிரச்சினைகளைத் தெரிவித்துள்ளனர். பூசகர் இவர்கள் குடும்பத்தின் மீது தெய்வக் குற்றம் காணப்படுவதாகவும் அதற்கான பரிகாரம் எனவும் கூறி அவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி யுள்ளார்.

இது தொடர்பாக இரு சகோதரிகளும் பன்வில பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறிப்பிட்ட பூசகர் கைது செய்யப்பட்டு தெல்தெனிய பதில் நீதிவான் எஸ்.பி.மடுகல்ல முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன் போது நீதிவான் பூசகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளா

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top