புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கன்னியாகுமரி மாவட்டம் ஆலுவிளையை சேர்ந்த செந்தில்வினோ (27), திருவள்ளூர் மாவட்டம் கீளம்பாக்கம் பகுதியை சேர்ந்த லாவண்யா, இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதலில் லாவண்யா கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு
மாதத்திற்கு முன் செந்தில்வினோ, தன் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வந்துவிட்டார்.

லாவண்யா அவரை கைபேசி மூலமாக தொடர்பு கொண்டபோது சுவிச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து லாவண் யா நேற்று செந்தில்வினோ வீட்டுக்கு வந்தார். தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார். செந்தில்வினோ, 2 வருடம் கழித்து திருமணம் செய்வதாக கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த லாவண் யா, பூச்சி மருந்தை குடிக்க, அவரை செந்தில்வினோ, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டொக்டர்கள் தெரிவித்தனர். தற்போது செந்தில் வினோவை பிடித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top