புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் ராணி (24). இவருக்கும் திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயனுக்கும் (6) கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது குழந்தைகள்
இந்துஸ்ரீ (3), ரோஹித் (2).

கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனம் வெறுத்த ராணி திருப்பூரை விட்டு சமீபத்தில் குழந்தைகளுடன் துறையூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தில், 20 நாட்களுக்கு முன்பு திருப்பூரில் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவனும் இறந்து விட்டார். கூலி வேலை செய்து வரும் பெற்றோருக்கு பாரமாக நாம் இருக் கிறோமே என வருந்திய ராணி குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

நேற்று பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராணி தனது இரு குழந்தைகளையும் அழைத் துக்கொண்டு பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றார்.

அங்கு குழந்தைகள் இருவரையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு அவரும் கிணற்றில் விழுந்தார்.

சிறிது நேரத்தில் 3 பேரும் மூச்சுதிணறி இறந்தனர். வெகுநேரமாக ராணியையும் குழந்தைகளையும் காணாததால் அக்கம் பக்கத்தினர் தேடியபோது 3 பேரின் சடலங்களும் கிணற்றில் மிதப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த துறையூர் போலீசார் 3 பேரின் சடலங்களை மீட்டு துறை யூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top