சொத்து தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அக்காவை அவரது தம்பி நடுரோட்டில் வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள வலசகவுண்டனூரைச் சேர்ந்தவர்
சிவன் (40). இவரது அக்கா வள்ளி (42). தர்மபுரியில் வசிக்கிறார். அக்கா, தம்பி இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து வள்ளி, தம்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போச்சம்பள்ளி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடக்கும் விசாரணையில் ஆஜராவதற்காக வள்ளி தனது மகளுடன் தர்மபுரியில் இருந்து போச்சம்பள்ளிக்கு வந்தார். போச்சம்பள்ளி நான்கு ரோடு வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சிவன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அக்காவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து மற்றும் கைகளில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். அருகில் இருந்த வள்ளியின் மகளையும் சிவன் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. தகவலறிந்து வந்த பொலிசார் வள்ளியை மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் தப்பி ஓடிய சிவனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக