புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மல்லாகம் கோணப்புலம் முகாமில் 09 வயதுச் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் முகாமில்
தங்கியிருக்கும் இந்த சிறுமிக்கு உரிய பாதுகாப்பு இல்லையென்பதை ஏற்கனவே தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தெல்லிப்பழை பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பாதுகாப்பு அலுவலருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறிப்பிட்ட சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் முகாமில் வாழும் பொது மக்களினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் உரிய இடத்திற்குச் சென்ற தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்களால் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிறுமியை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள். இது சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ___

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top