புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சித்தூர் அடுத்த பங்காருபாளையம் மண்டலம் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (32), விவசாயி. இவரது மனைவி வளர்மதி (27). ரமேஷ் கடந்த 20ம்தேதி அவரது வீட்டில் கழுத்தில் சேலை சுற்றியும், உடலில் காயங்களுடனும் மர்மமான
முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து பங்க கிருபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் ரமேஷின் மனைவி வளர்மதியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை
நடத்தினர்.

விசாரணையில் இளம்பெண் போலீசாரிடம்,  ‘’எனக்கும் அதே கிராம த்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவ ருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதையறிந்த எனது கணவர் ரமேஷ் கள்ளக்காதலை கைவிடு ம்படி அடித்து துன்புறுத்தி வந்தார்.

இதனால் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி கடந்த 20ம்தேதி இரவு ரமேஷ் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சின்னதுரையை வீட்டுக்கு வரவழைத்தேன்.

பின்னர் திட்டமிட்ட படி ரமேஷை, இரும்பு ராடால் சின்னதுரை பலமுறை ஓங்கி அடித்தார். மேலும் கத்தியால் கழுத்தை அறுத்தார்.

நானும் உருட்டுக் கட்டையால் கணவரை தாக்கினேன். இதில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து போலீசுக்கு சந்தேகம் வராமல் இருக்க ரத்த காயங்களை சுத்தப்படுத்தி கழுத்தில் சேலையை சுற்றி தற்கொலை செய்துகொண்டதுபோல் நாடக மாடினோம். ஆனால் போலீசார் பிடித்துவிட்டனர்’’என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சின்னது ரையும் கைது செய்யப்பட்டார். இருவரும் சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு நீதிபதி உத்தரவி ன்பேரில் 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top