இளைஞன் ஒருவரது அடிவயிற்றைக் கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று சிலாபம், மாதப்பை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.காயமடைந்த இளைஞன், வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் தேங்காய் பறிக்கச் சென்றபோது அண்டை
வீட்டிலிருந்த யுவதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியுள்ளது.
ஆத்திரமடைந்த யுவதி இளைஞனைத் தாக்கியதுடன் அவரது அடிவயிற்றைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த இளைஞன் தற்போது மாதம்பை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சம்பவம் தொடர்பாக யுவதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக