புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இரண்டாவது திருமணம் செய்வதாக ஏமாற்றி கேரளாவைச் சேர்ந்த கோவில் பூசாரியிடம் ரூ.30 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.


குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர் சூசையடிமை. அவரது மனைவி சலோமி. குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்த சலோமி தனது இரண்டு குழந்தைகளுடன் திருச்சூரில் வசித்து வந்தார். அப்போது குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

எர்ணாகுளம் திருப்புணிதுறா பகுதியைச் சேர்ந்தவர் வாமனன் நம்பூதரி. கோவில் பூசாரி. அவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதையடுதது அவர் இரண்டாவது திருமணம் செய்வதற்காக பெண் வேண்டும் என விளம்பரம் கொடுத்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த சலோமி வாமனன் நம்பூதரியை செல்போனில் தொடர்பு கொண்டு தனது பெயர் உதயா என்றும், திருநெல்வேலியில் ஒரு பொறியியல் கல்லூரியில் என்ஜினியரிங் படித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.

இந்நிலையில் மீண்டும் அவரை தொடர்பு கொண்ட சலோமி திருநெல்வேலியில் ஒரு பிளாட் வாங்க முடிவு செய்திருப்பதாகவும், ரூ.10 லட்சம் தேவை எனவும் கூறி பணத்தை வாங்க அமுதா என்ற பெண்ணை அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் அமுதா என்ற பெயரில் சலோமியே சென்று வாமனன் நம்பூதரியிடம் பணத்தை வாங்கியுள்ளார். இது போல் பல காரணங்களைக் கூறி ரூ.30 லட்சம் ரொக்கம், 10 பவுன் நகையை வாங்கியுள்ளார். இந்நிலையில் உதயாவை நேரடியாக பார்க்க விரும்புவதாக வாமனன் நம்பூதரி கூறியுள்ளார்.

அதற்கு பிறகு சாலோமி தனது செல்போன் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டது வாமனன் நம்பூதரிக்கு தெரிய வந்தது. உடனே இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த மோசடி குறித்து கேரள போலீசார் நடத்திய விசாரணையில் சலோமியும், அவரது கள்ளக்காதலன் டேவிட்டும் திருவனந்தபுரம் கன்னத்துறை பகுதியில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top