புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்.நாவற்குழியில் தந்தையை இழந்து தனது தாயுடன் வசித்து வரும் சிறுமி ஒருவர் கடந்த ஒரு வருடங்களாகப் சிறுமியின் மாமன் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளார்.தந்தையை இழந்த இந்தச் சிறுமியின் தாயார் நாவற்குழியிலுள்ள வீடு ஒன்றில் சமையல் வேலை செய்தே சிறுமியைக் காப்பாற்றுவதாகவும் தாயார் சமையல் வேலைக்குச் சென்ற பின்னர் பாடசாலையால் வரும் இந்தச் சிறுமி சந்தேக நபரான உறவினர் வீட்டிலே தங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் நாவற்குழி மகாவித்தியாலயத்தில் 3ம் தரத்தில் கல்வி கற்கும் இந்தச் சிறுமி பாடசாலையில் மயக்கமடைந்து விழுந்த்தாகவும் இதன்போதே அந்தச் சிறுமி தன்னுடைய மாமன் முறையான அந்த இளைஞனால் கடந்த ஒருவருடமாகப் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பாடசாலை சமூகத்தினரால் சாவகச்சேரிப் பொலீஸாருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதை அடுத்து பொலீஸார் சந்தேக நபரான குறித்த இளைஞனைக் கைது செய்தனர்.

இந்தச் சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை சாவகச்சேரிப் பொலீஸார் நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது சந்தேக நபரை விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் 14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top