தாயிடம் தந்தை தகராறு செய்ததால் வேதனை அடைந்த 11 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.பெங்களூர் பீனியா 1வது ஸ்டேஜை சேர்ந்தவர் பசவராஜு. இவருக்கு 4 மனைவிகள். 3 வது மனைவி சாரதா. இவர் தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்து
வருகிறார்.பசவராஜுக்கும், சாரதாவுக்கும் 11 வயதில் காவ்யா என்ற மகள் இருந்தாள். இவள் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில், சம்பவத்தன்று சாரதா ஆயத்த ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த காவ்யா, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேலைக்கு சென்றிருந்த சாரதா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதறி அழுதார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தனது தாயை தந்தை அடிக்கடி சித்ரவதை செய்து வந்ததால், காவ்யா இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டது தெரியவந்து உள்ளது. 4 பெண்களை திருமணம் செய்து கொண்ட பசவராஜபு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்து உள்ளார். இதனால் அவர் செலவுக்கு பணம் கேட்டு தனது 3 வது மனைவி சாரதா, மகள் காவ்யாவை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக