புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நிதி நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளான கன்னட பட தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.கன்னட பட தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ்(வயது 42). அட்டகாசா படத்தை தயாரித்த அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.


நிதி நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து லக்ஷ்மிபுராவில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு போன் செய்து தான் அவசர வேலையாக மைசூர் செல்வதாகவும், அதனால் அங்கிருந்து உடனே வீட்டுக்கு வருமாறும் தனது மனைவி மற்றும் தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரது மனைவியும், தாயும் ராஜாஜி நகர் வீட்டுக்கு கிளம்ப ஸ்ரீனிவாஸ் .32 எம்எம் துப்பாக்கியுடன் பண்ணை வீட்டுக்கு சென்றார்.

அங்கு சென்ற பிறகு தனது சகோதரர்கள், சகோதரிகளுக்கு போன் செய்து சுமார் 30 நிமிடம் பேசியுள்ளார். இரவு 7 மணி அளவில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

இரவு 7 மணி முதல் 10 மணி வரை அவரது நண்பர்களும், குடும்பத்தாரும் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அதற்குள் அவர் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏதோ சந்தேகம் எழ அவரது நண்பர்கள் பண்ணை வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். ஸ்ரீனிவாஸ் கடந்த 3 ஆண்டுகளாகவே மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும், மனைவி, குழந்தைகளுடன் கூட முகம் கொடுத்து பேசாமல் இருந்ததாகவும் அவரது குடும்பத்தார் தெரிவி்ததனர்.

அவருக்கு நிதி நெருக்கடி உள்ளிட்ட சில பிரச்சனைகள் இருந்ததால் அவர் தூக்கமில்லாமல் தவித்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். தூங்கப் போகும் முன் அவர் தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வாராம். மன உளைச்சலால் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

ஸ்ரீனிவாஸ் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவரது தற்கொலை குறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top