சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹிபெய்யில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன.நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை. தாங்ஷான் சிட்டி மாவட்டம் அருகே 8 கிலோ மீட்டர்
ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்ததாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பெய்ஜிங்கிலும், டியான்ஜியான் நகரிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த இரு பெருநகரங்களும் தாங்ஷானிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக