தனது காதலனுடன் வாழ்ந்து வந்த 19 வயது யுவதியை காதலனுக்குத் தெரியாமலே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணமோசடி செய்த முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரையும் அவரின் மனைவியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது பற்றித் தெரிய வருவதாவது,
பலாங்கொடைப் பிதேசத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியும் அவரது காதலனும் கடுவெலப் பிரதேசத்தில் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு அந்யோன்யமான முச்சக்கரவண்டிச் சாரதியும் அவன் மனைவியும் குறிப்பிட்ட யுவதியின் காதலனுக்குத் தெரியாமலே பலருக்கு அப்பெண்ணைத் தாரை வார்த்துள்ளனர். இதற்குக் கூலியாக 15 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபாவரை பெற்றுள்ளனர். 15 வயது யுவதி என்று கூறியே இவ்வாறு மோசடி செய்து வந்த அவர்கள் யுவதிக்கு வெறும் 2000 ரூபாவை மட்டுமே வழங்கி வந்துள்ளனர்.
ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர் வழங்கிய ஓர் இரகசியத் தகவலை அடுத்து மஹரகம பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கடுவெலப் பகுதியில் வைத்து விஷேட அதிரடிப்படைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதி பாணந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. பாணந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக