புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஹன்சிகா தென்னிந்திய படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார். இதுபற்றி ஹன்சிகா சொல்கிறார். இந்திப் படங்களில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. இந்தியில் ரூ.7 லட்சம் சம்பளம் தருவார்கள். அதிக பட்சமாக ரூ.20 லட்சம் வரை கிடைக்கலாம். ஆனால் தமிழ், தெலுங்கு படங்களில் அதைவிட அதிக தொகை கிடைக்கிறது. நல்ல கேரக்டர்களிலும் நடிக்க முடிகிறது.



இந்தியில் குறைவான சீன்களே நடிகைகளுக்கு கிடைக்கிறது. அங்கு எல்லாப் பெருமையும் நடிகர்களுக்குத்தான் போய் சேருகிறது. நடிகைகளுக்கு எதுவும் கிடைப்பது இல்லை. தமிழ், தெலுங்கு படங்களில் எனக்கு மரியாதை தருகிறார்கள். நல்ல கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது.


விஜய், தனுஷ், ஜெயம் ரவி, அல்லுஅர்ஜுன், நாகசைதன்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடக்கவும் வாயப்பு கிடைக்கிறது. சல்மான்கானிடம் வாய்ப்பு கேட்டு அலைவதாக செய்திகள் வருகின்றன. நான் அவரிடம் வாய்ப்பு கேட்கவில்லை. காதலிக்கவும் எனக்கு நேரம் இல்லை. பிசியாக நடிக்கிறேன். இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கப்போய் விடுகிறேன். இவ்வாறு கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top