உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நோயாளி மனைவியை, கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் ஓகியோ நகரில் வசிப்பவர் ஜான் வைஸ்(வயது 66). இவரது மனைவி
பார்பரா(வயது 65).
இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஓகியோவில் உள்ள அக்ரான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார் ஜான். மனைவியின் படுக்கை அருகே சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ஜான், திடீரென கைத் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டார்.
சத்தம் கேட்டு மருத்துவர்கள் ஓடி வந்து பார்த்து போது, அங்கு ரத்த வெள்ளத்தில் பார்பரா இறந்து கிடந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், ஜானுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதற்குள் தகவல் அறிந்து பொலிசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர். ஜான் மீது கொலை வழக்கு பதிவு செய்து பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நோயில் இருந்து சிறிது சிறிதாக குணமடைந்து வந்த பார்பராவை எதற்காக ஜான் சுட்டுக் கொன்றார் என்பது தெரியவில்லை என்று மருத்துமவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக