புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஈரமான காலுறை மற்றும் உள்ளாடையை மைக்ரோ ஓவனில் உலர வைத்ததால் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது.
பிரிட்டனின் தென்மேற்கில் உள்ளது டோர்செட். இங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்த நபர் ஒருவர், ஈரமான தனது கால் உறைகள் மற்றும் இரண்டு
உள்ளாடைகளை மைக்ரோ ஓவனில் வைத்து உலர வைத்துள்ளார்.

அதிகப்படியான வெப்பத்தில் இந்த துணிகள் தீப்பற்றி, சமையலறை முழுவதும் பரவியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட நபரை மீட்டு, சமையலறையில் பரவிய தீயையும் அணைத்தனர்.

இனிமேல் மைக்ரோ ஓவனை சமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என அந்த நபருக்கு அறிவுரை வழங்கிச் சென்றனர் தீயணைப்பு வீரர்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top