புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மலேசியாவில் பேயோட்டும் சடங்கில் மூன்று வயது சிறுமி பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், மலேசியாவின் வடபகுதியில் உள்ள பெனாங் மாகாணத்தில் பேயோட்டும் சடங்கொன்று நடந்தது.


தாங்கள் அங்கு சென்று பார்த்த போது, இந்தோனேஷிய நாட்டின் பணிப்பெண் உட்பட எட்டு பேர் இருந்தனர் என்றும், அவர்கள் அனைவரும் ஓர் இருட்டு அறையில் மூன்று வயது சிறுமியை சூழ்ந்து கொண்டு ஏதோ மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தனர்.

இவ்வாறு செய்ததால் அந்த சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதற்கு இந்த சிறுமியின் பெற்றோரும், அந்த பணிப்பெண்ணுமே காரணம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தப் பேயோட்டும் சடங்கு பல மணி நேரங்கள் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top