சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் சின்னத்திரை பக்கம் போவது போல நடிகர் அப்பாசும் சின்னத்திரை பக்கம் ஒதுங்கியிருக்கிறார்.விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர்
தர்மயுத்தம். இந்த தொடர் மூலம் நடிகர் அப்பாஸ் சின்னத்திரைக்கு வருகிறார்.
இரண்டு குடும்பங்கள் எதிரும் புதிருமாக நின்று தங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தின் மூலம் கிடைக்கப் போராடும் கதை தான் `தர்மயுத்தம். இதில் பிரபல வழக்கறிஞர்களாக பெரிய திரை நடிகர்கள் அப்பாஸ், கார்த்திக் குமார் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் கிட்டி, ராகவேந்தர், நடிகை அனுஜா ஐயர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக