புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தக் கிராமம் மல்லாவியில் இருந்து கிழக்குப் புறமாகச் சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் கூலித்தொழிலையும் விவசாயத்தையுமே மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தக் கிராமத்தின் உள்ளக வீதிகள் குன்றும் குழியுமாகக் காணப்படுவதால் மக்கள் சீரானவகையில் பிரயாணங்களை மேற்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.
அத்துடன் குடிதண்ணீருக்கும் வேறு இடங்களுக்கு அலைந்து திரிகின்றனர். மேலும் இங்கு ஐந்து குழாய்க் கிணறுகள் இருந்த போதும் அதில் மூன்று குழாய்க் கிணறுகள் ஏற்கனவே செயலிழந்துள்ளன. இங்குள்ள மக்கள் அயல் கிராமத்தில் குடிதண்ணீரைப் பெற்று வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் மீள்குடியமர்ந்து 3 வருடங்கள் கடந்த நிலையிலும் அடிப்படை வசதிகளான மலசலகூடம், குடிதண்ணீர், நிரந்தர வீடுகள் மின்சார வசதிகள், என்பன இல்லாத நிலையே காணப்படுகின்றது.

மீள்குடியமர்வின் ஆரம்பத்தில் கிறிஸ்தவ நிறுவனமொன்றினால் மூன்று குடும்பங்களுக்கு கல்வீடுகள் அமைத்து வழங்கப்பட்டன. ஏனைய குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றித் தற்காலிகமான தகரக் கொட்டகைகளில் வசித்து வருகின்றன.

மேலும் இந்தக் கிராமத்தில் சுமார் 25இக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி கற்று வருகின்றனர். மின்சார வசதிகள் இன்மையால் இரவில் இவர்கள் தமது கல்வியைக் குப்பி விளக்குடன் தொடர்வதைக் காணமுடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top